12 Jan

தரம் 06 - 2021 அனுமதிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை

எமது கல்லூரியில் தரம் 06 - 2021 வகுப்புக்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சையானது 06.01.2021 புதன்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. தற்போதைய கொரோனா பாதிப்பு நிலைமை காரணமாக குறித்த அனுமதிக்கான விண்ணப்பங்கள் முற்றுமுழுதாக நிகழ்நிலையில் கோரப்பட்டிருந்தன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் இருந்து தரம் 5 புலமைப்பரிசில் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எமது முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையிலான நேர்முகப்பரீட்சை சபையினரால் அவர்களுக்கான அனுமதிகள் குறித்த தினத்தில் வழங்கப்பட்டன. சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடாத்தப்பட்டிருந்த குறித்த நேர்முகப்பரீட்சையில் மாணவர்கள் தமது பெற்றோர்களுடன் கலந்துகொண்டிருந்தனர்.

அனுமதிக்கு தேவையான மேலதிக தரவுகள் அன்றையதினமே பிரத்தியோக இணையமுகப்பின் மூலம் நிகழ்நிலையில் கணினிமயப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Translation

The interview for the admission of students to grades 06 - 2021 in our college was held on Wednesday 06.01.2021 at the college auditorium. Applications for admission were called in online due to the current corona situation. The documents of the students who are short-listed based on their grade 5 scholarship marks were verified and their admissions were granted on the same day by the Board of Interview headed by our Principal Mr. G. Krishnakumar. The students were accompanied by their parents in an interview which was conducted following the health rules.


It is noteworthy that the additional data required for admission was computerized on the same day through a dedicated portal.

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment