எமது பாடசாலை தரம் 10 (2022) மாணவி செல்வி.லாவண்ஜா தனபாலசிங்கம் அவர்கள் சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமையை பறைசாற்றியுள்ளார். இப் போட்டிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட ஆசிரியர்களான திருமதி.சுதந்திரா சதீஸ்வரன், திருமதி.பாலநளினி சிறிதர், திருமதி.மதனகௌரி பிரதாப்,திரு.இராஜரட்ணம் தர்மசீலன் மற்றும் திரு.கணபதிப்பிள்ளை வைகுந்தராசா ஆகிய ஆசிரியர்களுக்கும் மாணவிக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.
Write a comment