07 Jan

கல்லூரியில் இடம்பெற்ற பிரியாவிடை மற்றும் கௌரவிப்பு நிகழ்வுகள்

எமது கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் ஓய்வு பெற்றுச் சென்றவர்கள், பதவியுயர்வு பெற்றுச் சென்றவர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மற்றும் புதிதாக திருமணமண பந்தத்தில் இணைந்து கொண்டவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு என்பன 05.01.2022 அன்று எமது கல்லூரியில் இடம்பெற்றன.

யா/நெல்லியடி மத்திய கல்லூரி பணியாளர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட நிகழ்வில் பணியாளர் கௌரவிப்பு மற்றும் மதிய போசன விருந்துபசாரம் என்பன இடம்பெற்றன.

இன்றைய சூழ்நிலையில் சிரமங்களுக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடாத்திய பணியாளர் பேரவையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்த எமது கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

Translation

The farewell event for the Retired, Promoted and Transferred Teachers and Staff of our College and an event to honor the newlyweds was held on 05.01.2022 at our College.

The event was organized by the J/ Nelliyadi Central College Staff Council and featured staff honors and a luncheon.

Mr. G. Krishnakumar, Principal of our College, congratulated the staff council for well organizing the event in the midst of difficulties in today's situation and forward his wishes to the staffs who are honored in this event.

 

 

 

 

 

 

 

 

 

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment