எமது கல்லூரியின் அதிபராக திரு.G.கிருஷ்ணகுமார் (SLPS I, Sc.Trd., B.A., P.G.D.E. , P.G.D.E.M., M.Ed.) அவர்கள் இலங்கை கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்கும் பொருட்டு நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சை மூலம் தேர்வு செய்யப்பட்டு 25.02.2020 அன்று கல்வி அமைச்சில் வைத்து இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் இதுவரை எமது கல்லூரியில் பதில் அதிபராக கடமையாற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் நியமனத்தின் அடிப்படையில் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் 26.02.2020 அன்று கல்லூரியில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கல்லூரிச் சமூகம் சார்பில் எமது கல்லூரியின் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரின் தலைமையின் கீழ் எமது கல்லூரியானது மென்மேலும் வளர்ச்சிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Translation
Mr.G.Krishnakumar (SLPS I, Sc.Trd., B.A., P.G.D.E. , P.G.D.E.M., M.Ed.) appointed as the principal to our school by the Ministry of Education, Sri Lanka. This appointment was stated by the interview which was held to select the principals to national Schools and the appointment letter was handed over at the Ministry of Education, Sri Lanka on 25.02.2020. Mr.G.Krishnakumar previously worked as acting principal in our school until this appointment made.
By this appointment, Mr.G.Krishnakumar assumed his duties on 26.02.2020 in our school.
We wish our principal on behalf of our school society and pray the god for the further development of our school under the leadership of Mr.G.Krishnakumar.
Write a comment