28 Feb

எமது முதல்வருக்கு கல்லூரி பணியாளர் பேரவையால் அளிக்கப்பட்ட கௌரவம்

திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கடந்த 25.02.2020 அன்று இலங்கை கல்வி அமைச்சினால் எமது கல்லூரிக்கான உத்தியோகபூர்வ அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார். அதனை கௌரவிக்கும் முகமாக 28.02.2020 அன்று எமது கல்லூரி பணியாளர் பேரவையினால் கௌரவிப்பு நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரியின் நலன்விரும்பிகள் பங்குகொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் அவர்கள், தனது இவ் வெற்றியை கல்லூரிச் சமூகத்துக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்ததோடு, கல்லூரி வளர்ச்சியில் பணியாளர்கள் என்ற ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆற்றிவரும் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்திருந்தார்.

Translation

The honouring event conducted by our School Staff Union was held in our school on 28.02.2020 to honouring our principal Mr.G.Krishnakumar for his appointment as a principal by the Ministry of Education on 25.02.2020. Teachers, Students, staff and well-wishers participated in this event.

Our principal dedicates his victory to the school society and thanked the teachers for their dedicated service for our school's development.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment