07 Feb

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு முறைமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

வேலும் மயிலும் அறக்கட்டளையின் அன்பளிப்பில் எமது கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு முறைமையானது 07.02.2020 அன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் அழைப்பின் பேரில் வேலும் மயிலும் அறக்கட்டளையின் பணிப்பாளர்களான திரு. தயா தயான், திருமதி.சுமி தயான், வேலும் மயிலும் அறக்கட்டளையின் இணைப்பாளர் திரு.தே.சிவகுமாரசாமி மற்றும் குழுவினர்கள் பங்குபற்றிய இவ் விழாவில் திரு. தயா தயான் அவர்களினால் குறித்த குடிநீர் சுத்திகரிப்பு முறைமை பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் 150 லீற்றர் நீரைச் சுத்திகரித்து வழங்கக்கூடிய இயலுமையுடைய இக் குடிநீர் சுத்திகரிப்பு முறைமையை கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்தமைக்காகவும், நேரில் விஜயம் செய்து திறந்து வைத்தமைக்காகவும் வேலும் மயிலும் அறக்கட்டளையின் பணிப்பாளர் மற்றும் இணைந்த குழுவுனருக்கு எமது முதல்வர் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.

Translate

A newly built water purifying system was officially opened on 07.02.2020 at our college campus. Mr. Daya Thayan, Mrs. Sumi Thayan who are the Directors of Velum Maylum Foundation, Mr.T.Sivakumarasamy who is the coordinator of Velum Maylum Foundation and team members participated in this event by the invitation from our principal Mr.G.Krishnakumar and that water purifying system was officially opened by the hands of Mr. Daya Thayan.

Our principal thanked the Velum Maylum Foundation director and the team for this water purifying system which capable to purify 150 litres of water per hour and their attent for this event.

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment