30 Jan

எமது கல்லூரியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு முறைமை நிர்மாணிப்பு

எமது கல்லூரி மாணவர்களுக்கான சுத்தமான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்காக வேலும் மயிலும் பவுண்டேசனினால் ஒரு மணி நேரத்தில் 150 லீற்றர் நீரைச் சுத்திகரித்து வழங்கக்கூடிய சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1400 ற்கும் அதிகமான மாணவர்கள் கல்விகற்கும் எமது கல்லூரியில் தடங்களின்றி சுத்திகரித்த குடிநீரை பாடசாலை பிள்ளைகள் பெறக்கூடியதாகவுள்ளது.

இவ்வுதவியை காலமறிந்து வழங்கிய வேலும் மயிலும் பவுண்டேசன் பணிப்பாளருக்கும் இணைப்பாளருக்கும் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எமது கல்லூரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதலாவது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. அவ் இயந்திரத்தை அன்பளிப்புச் செய்த  திருமதி .சிவாஜினி சோமஸ்கந்தராஜா அவர்களுக்கும் அதிபர் அவர்கள் இந் நேரத்தில் நன்றிகளை தெரிவித்துள்ளார். அது தொடர்பான செய்தியை இவ் இணைப்புமூலம் அணுகமுடியும். இங்கே அழுத்தவும்

Translation

The water Purefing System which able to filtering 150 liters of drinking water per hour was donated to our school by Velum Maylum Foundation. This water Purefing System support to providing drinking water supply to nearly 1400 of our students smoothly.

Our principal Mr.G.Krishnakumar thanked to the Director and Coordinator of Velum Maylum Foundation for their on-time donation.

The very first water Purefing System was installed in our school in 2016. Our principal thanked Mrs.Sivajini Somaskantharajah also, who donated the first system at this time. The link related to this news follows. Click Here

J/Nelliady Central College
J/Nelliady Central College

Census no : 09269
Zone : VADAMARACHCHI

Write a comment