22.10.2022 அன்று காலியில் நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் அணி தேசிய மட்ட கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது எமது கல்லூரி. இம் மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் திரு.சி.ஜெயப்பிரதாபன், உடற்கல்வி ஆசிரியர் திருமதி.தி.சுபேந்திரா, பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் செல்வி.பா.அருண்சியா ஆகியோருக்கும் இதனை நெறிப்படுத்தி வழிப்படுத்திய கல்லூரி முதல்வர் செல்வி.இ.சுப்பிரமணியக்குருக்கள் அவர்களுக்கும் கல்லூரிச் சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
Write a comment