எமது பாடசாலையின் க.பொ.த உயர்தர மாணவிகளின் ஒன்றுகூடல் நிகழ்வும் "ஒளிக்கீற்று" சஞ்சிகை வெளியீடும் 15.10.2022.
கடந்த 17 வருடங்களுக்குப் பின் இம்முறை க.பொ.த உயர்தர ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக எமது பாடசாலையின் பழைய மாணவியான எந்திரி.கௌதமி அச்சுதன் (செயற்றிட்ட முகாமையாளர், SD&CC) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் முதன் முறையாக சஞ்சிகை ஒன்றும் கல்லூரி முதல்வர் செல்வி.இ.சுப்பிரமணியக்குருக்கள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் பல்வேறுபட்ட சுவைகளைக் கொண்டதான ஆக்கங்கள் அச் சஞ்சிகையில் காணப்பட்டது. அச் சஞ்சிகையின் நூல் ஆய்வாளராக திரு.அமிர்தலிங்கம் பௌநந்தி, விரிவுரையாளர், கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம் அவர்கள் கலந்து கொண்டார்.
Write a comment