எமது கல்லூரியில் 2020 ஆம் ஆண்டுக்கான தொழில்நுட்பக் கண்காட்சியானது 27.02.2020 வியாழக்கிழமை ஆரம்பமாகி இரண்டு நாட்கள் கல்லூரியின் தொழில்நுட்பபீட வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரி முதல்வர் திருG.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திரு.கி.கிருஸ்ணபாலன் - ஓய்வுநிலைப் பணிப்பாளர், தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் அதிலுள்ள வாய்ப்புகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில், தொழில்நுட்பம் சார் சேவைகளை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வளவாளர்களாக கலந்துகொண்டு தொழில்நுட்பத் துறையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச வாய்ப்புக்கள் தொடர்பில் விளக்கங்களையும் அறிவிறுத்தல்களையும் வழங்கினர்.
அத்துடன் எமது கல்லூரி மாணவர்களின் படைப்புக்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் எமது கல்லூரி மாணவர்கள் உட்பட ஏனைய பாடசாலை மாணவர்களும் பங்குகொண்ட நிலையில் அவர்களுக்கு இச் சந்தர்ப்பமானது தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை தொடர்பில் சிறந்த அறிமுகத்தை வழங்கியிருந்தது.
Translation
The Technology Exhibition - 2020 was held in our school on 27.02.2020 and 28.02.2020 two days at our technology faculty campus. Our principal Mr.G.Krishnakumar lead the event and Mr.K.Krishnapalan - Ret. Director, NAITA participated as chief guest.
This exhibition was arranged because of to provide awareness of growing technology and the opportunities which are in the technology field. Government and non-Government organizations that providing technology-related services are participating in this event as resource organizations and provide the instructions about educational and career opportunities which are in the field of technology to the participants.
Creations of our school students' are also exhibited in this event. This event provided the introduction about career guidance and counselling in the technology sector to the students and others who are participated in this event.
Write a comment